அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை | Removed Sengottaiyan, AIADMK key executives hold meeting at EPS residence

Share

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது.

இபிஎஸ் இல்லம்

இபிஎஸ் இல்லம்

இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன், நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த சம்பவம் அ.தி.மு.க உறுப்பினர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com