சென்னை: திருவண்ணாமலையில் வருகிற 2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அதிமுக விவசாய பிரிவின் சார்பில் வருகின்ற 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன். இந்த நிலையில், திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளதால், விவசாயப் பிரிவின் சார்பில் 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து எடப்பாடி அறிவிப்பு
Share