அதிமுக: எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததன் பின்னணியில் பாஜகவா? முழு விவரம்

Share

அதிமுக -பாஜக

தேர்தலில் வெல்லவேண்டுமானால் அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தமிழக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க. சொல்வது என்ன?

மனம் திறந்த செங்கோட்டையன்

வெள்ளிக்கிழமையன்று காலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், “கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

‘ஒற்றுமையே பலம்’ – எச்.ராஜா

அதிமுக -பாஜக
படக்குறிப்பு, பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச். ராஜா

பா.ஜ.கவின் சில தலைவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது அவர்கள் நழுவும் வகையிலேயே பதிலளித்தார்கள். பா.ஜ.கவின் மூத்த தலைவரான எச். ராஜாவிடம் கேட்டபோது, “அவர் அ.தி.மு.கவிலேயே இருக்கிறார், அவருடைய உணர்வுகள் எனக்குப் புரிகிறது. என்றைக்கும் ஒற்றுமையே பலம். தமிழ்நாட்டில் தே.ஜ.கூவை தலைமை ஏற்றிருப்பது அ.தி.மு.க. செங்கோட்டையனும் அதிமுகவில்தான் இருக்கிறார். அவருடைய கோரிக்கைக்கு அதற்கான தாக்கம் இருக்குமெனத் தெரிகிறது. தே.ஜ.கூவை எல்லோருமே பலப்படுத்த வேண்டும். பலவீனப்படுத்தக் கூடாது. கருத்து வேறுபாடு இருந்தால் உட்கார்ந்து பேசுவோம். பேசினால் பிரச்னை தீரும்” என்று பதிலளித்தார்.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com