மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசிவருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி
“எம்ஜிஆர் தொடங்கிய மக்கள் இயக்கம் 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கினார்.
அவர் மரணத்திற்கு பின் இந்த இயக்கத்தை இரவு பகல் பாராது வெற்றிப்பாதையில் வழிநடத்தி தமிழக மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலினும், அதிமுகவில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்ற பகல் கனவிற்கு சில பேர் இரையாகும் பிரச்னை உள்ளது.
பிளவு உள்ளது என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பெருகிவரும் செல்வாக்கை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி ஒருபுறமும், அதற்கு சிலர் இரையாகியுள்ள நிலையை பார்க்கும் ஒவ்வொரு தொண்டனும் வேதனை அடைகிறார்கள்.