சுய இன்பம் செய்யும்போது திடீரென ரத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட ஆண் எப்படி பதறிப்போவார்..? இப்படியொரு கேஸ் ஹிஸ்டரியையும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
“ஒருத்தர் ரொம்ப ரொம்ப பதற்றமா ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கார் டாக்டர். உங்களை உடனே பார்க்கணுமாம். எமர்ஜென்சி என்று அவசரப்படுத்துகிறார்” என்றார்கள், என் மருத்துவமனையின் ரிசப்ஷனிஸ்ட்டுகள். எமர்ஜென்சி என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் `சரி உடனே உள்ள அனுப்புங்க’ என்றேன். கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தார். தண்ணீர் அருந்த வைத்து சமாதானப்படுத்தினேன். அவருடைய பிரச்னையைச் சொன்னார்.
`நான் அடிக்கடி சுய இன்பம் செய்வேன் டாக்டர். இன்னிக்கும் அதே மாதிரி செஞ்சுகிட்டிருந்தப்போ விந்துவோட ரத்தமும் வந்திடுச்சு. ஒருவேளை, நான் அதிகமா சுய இன்பம் செஞ்சதால ரத்தம் வருதோ… இல்லைன்னா, கேன்சரா இருக்குமோ… நான் செத்துடுவேனா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு’ என்றார்.