'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' – இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி

Share

அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம், எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார். கார்த்தியின் பின்னணியை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வீடு வழங்கியிருந்தார். கார்த்தி செல்வமும் அட்டாக்கிங் வீரராக இந்திய அணியில் சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார்.

Karthi Selvam
Karthi Selvam

கடைசியாக 2023 இல் சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடியிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவே இல்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் கார்த்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கார்த்தியை தொடர்புகொண்டு வாழ்த்துச் சொல்லி பேனினேன்.

நாளைக்கு ஆஸ்திரேலியா கிளம்புறோம்

‘ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. இப்போ பெங்களூருல ட்ரெய்னிங் கேம்ப்ல இருக்கேன். நாளைக்கு ஆஸ்திரேலியா கிளம்புறோம்.’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘சென்னையில நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்லதான் கடைசியா ஆடுனேன். அதுக்குப் பிறகு இந்தியன் டீம் சைடுல இருந்து கூப்பிடவே இல்லை. பெங்களூரு ட்ரெயினிங் கேம்புக்கும் வர சொல்லல. அதனால ஒரு 4 மாசம் சும்மாதான் இருந்தேன். வருமான வரித்துறைல வேலை பார்க்குறேன். அங்க போயி தினசரி வேலையை மட்டும்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணல. அதனால கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.

Karthi Selvam - விகடன் நம்பிக்கை விருதுகள்
Karthi Selvam – விகடன் நம்பிக்கை விருதுகள்

4 மாசம் கழிச்சு ட்ரெயினிங் கேம்புக்கு கூப்டாங்க. கோச் க்ரேக் ஃபுல்டன் என்னை ஆரம்பத்துல இருந்தே கவனிச்சுக்கிட்டு இருந்தாரு. உன்னோட மேட்ச் பிட்னஸ் போயிருச்சு. பிட் ஆகிட்டு வான்னு சொன்னாரு. நானும் மறுபடியும் வழக்கமான ப்ராக்டீஸ் எல்லாம் பண்ணி வெயிட்டை குறைச்சிட்டேன். அப்புறமா இந்தியா A டீம் டூர்ஸூக்கு கூட்டிட்டு போனாங்க.

தனியா ப்ராக்டீஸ் கொடுத்துட்டு இருக்காங்க!

நெதர்லாந்துல நல்லா பண்ணியிருந்தேன். அதை பார்த்துட்டுதான் இப்போ டீம்ல எடுத்துருக்காங்க. இந்தியன் டீம் பீல்ட் கோல் போடுறதுல தடுமாறுறாங்க. அந்த பிரச்சனையை சரி செய்யணும்னுதான் இப்போ வியூகங்களை வகுத்துட்டு இருக்காங்க. என்னை மாதிரி ஸ்ட்ரைக்கர்ஸூக்கு தனியா ப்ராக்டீஸ் கொடுத்துட்டு இருக்காங்க. ஒரு அட்டாக்கிங் ப்ளேயரா பந்து எங்கிட்ட இல்லன்னாலும் நான் எப்படி ஆடணுங்றத பத்தி இப்போ நிறைய பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்.’ என்றார்.

கார்த்தி செல்வம்
கார்த்தி செல்வம்

அப்பா – அம்மாக்கிட்ட சொன்னப்போ எப்படி பீல் பண்ணாங்க?

‘அவங்களுக்கு என்ன ரொம்ப சந்தோஷம்தான். அவங்களுக்கு நான் ஆடணும். நல்லா ஆடணும், நிறைய சாதிக்கணும். அவ்வளவுதான் ஆசை. அடுத்து ஆசியக்கோப்பை வருது இந்த ஆஸ்திரேலியா சீரிஸ்ல நல்லா பண்ணி ஆசியக்கோப்பைக்கும் போய்டணுங்றதுதான் என்னோட டார்கெட்.’ என தீர்க்கமாக பேசி முடித்தார் கார்த்தி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com