WPL : ‘தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி’ – மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்|Delhi Capitals Meg Manning Speech

Share

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு டெல்லி கேப்டன் மெக் லேனிங் மனமுடைந்து பேசியிருக்கிறார்.

மெக் லேனிங் பேசுகையில், “நாங்கள் இன்னொரு நல்ல சீசனை விளையாடினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய போட்டியில் மீண்டும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பை அணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், ஏனென்றால் அவர்கள் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். மிகவும் சிறப்பாகச் அனைத்து பணிகளையும் செய்தார்கள். எங்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக, பேட்டிங்கில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை. 150 ரன்களை சேசிங் செய்வது என்பது எங்களுக்கு ஒரு நல்ல இலக்காக தான் இருந்தது. ஓரிரு ஓவர்களுக்கு இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். எங்கள் அணியை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com