இந்திய அணியின் வீராங்கனைகள் :
* இந்த டி 20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்க இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும் சஜனா சஜீவன். கூடுதல் வீராங்கனைகள் – உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர் மற்றும் சைமா தாகூர் போன்ற வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பெற்று களம் காண இருக்கின்றனர்.

இந்தியா VS பாகிஸ்தான் போட்டி:
* இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ஆம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதனையடுத்து இந்தியா தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் 9ஆம் தேதி இலங்கையுடனும், 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோத இருக்கிறது.