Wiaan Mulder; Brian Lara; Test Cricket; ஜிம்பாப்வேவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 367 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் லாரா சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.

Share

இந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் முச்சதத்தைக் கடந்தார். மதிய உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவிந்திருந்தது.

வியான் முல்டர் 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

லாராவின் சாதனையை முறியடிக்க வெறும் 34 ரன்கள்தான் தேவை, உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் வியான் முல்டர் அதை நிகழ்த்திக்காட்டுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

Wiaan Mulder - வியான் முல்டர்

Wiaan Mulder – வியான் முல்டர்
ICC

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து அதிர்ச்சி கொடுத்தார் வியான் முல்டர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்றாலும் வியான் முல்டரின் இந்த தன்னலமற்ற செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லாராவின் சாதனையை வியான் முல்டர் முறியடிக்காமல் விட்டாலும், வெளிநாடு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் மற்றும் வீரர், கேப்டனாக அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்தவர், டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர், டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த தென்னாபிரிக்க கேப்டன் மற்றும் வீரர், ஒரு இன்னிங்ஸில் 100+ ஸ்ட்ரைக்ரேட்டில் 350+ ரன்கள் அடித்த ஒரே வீரர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wiaan Mulder - வியான் முல்டர்

Wiaan Mulder – வியான் முல்டர்
ICC

அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 27 ஓவர்களில் 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஜிம்பாப்வே அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 300+ ரன்கள் அடிக்க வேண்டும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com