why you should never start your day with milk ayurveda explains

Share

காலையில் பால் குடிப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் பலகாலமாக நடந்து வருகையில், காலையில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் எந்தெந்த நேரங்களில் பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி ஆயுர்வேதம் சில தகவல்களை சொல்கிறது.

குழந்தை பிறந்ததும் நம் குழந்தைக்கு முதல் உணவாக பால் தான் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை அனைவருக்கும் இந்த பால் அவர்களின் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாகவும் இருந்து வருகிறது. ஆனால் பல காலங்களாகவே பால் குடிப்பதில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் நடந்து வண்ணம் உள்ளன.

பாலை எப்போது குடிக்க வேண்டும், எதனுடன் கலந்து குடிக்க வேண்டும், எந்த பால் குடிக்க வேண்டும் என்பதைப் போன்ற பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முக்கியமாக நம்மில் பலர் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கலாம். அது மிகவும் ஆரோக்கியமானது என்று நாம் இவ்வளவு நாள் நம்பிக் கொண்டிருக்கையில் ஆயுர்வேதம் அதை பற்றி ஒரு முக்கியமான அதிர்ச்சியூட்டும் கருத்தை முன்வைக்கிறது.

காலையில் பால் குடிக்கலாமா?

நீங்கள் தினமும் எழுந்தவுடன் ஒரு ஒரு டம்ளர் பால் குடித்த பின்பு தான் காலை உணவு உண்ண செல்வீர்கள் என்றால் ஆயுர்வேதம் உங்களை கடுமையாக எச்சரிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின்படி வெறும் வயிற்றில் பால் குடிப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெறும் வயிற்றில் பால் குடிக்கும் போது அது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இது உடலுக்கும் தோலுக்கும் தீமை தரக்கூடியது. இதனால் உங்கள் தோலின் பளபளப்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா..? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..?

நீங்கள் காலையில் எழுந்தவுடன் பால் குடித்தால் உங்கள் செரிமான மண்டலத்திற்கு ஆரம்பத்திலேயே அதிக வேலையை கொடுக்கிறீர்கள் என்று பொருள். அதன் பிறகு நீங்கள் காலை உணவை உன்னும் போது அதனை சேரிப்பதற்காக உங்கள் செரிமானம் மண்டலம் இன்னும் மெனக்கெட வேண்டும். இதனால் உங்களுக்கு வாயிற்று வலி, அல்சர் பிரச்சனை, அசிடிட்டி வாந்தி போன்றவை கூட ஏற்படலாம்.

பால் குடிக்க சிறந்த நேரம் :

ஆயுர்வேத மருத்துவத்தின் வழிகாட்டுதலின்படி பார்த்தால் மாலை வேளையில் பால் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மையை கொடுக்கும். ஏனெனில் பால் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்தாலும் அது மிக எளிதில் செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுதான். மேலும் பால் குடித்த பின்பு நீங்கள் ஓய்வில் இருந்தாலும் அது உங்களை புத்துணர்ச்சியோடே வைத்திருக்கும். மேலும் நீங்கள் மாலையில் பால் அருந்தும் போது அது உங்களுடைய நரம்பு மண்டலத்துக்கும் மிகவும் நன்மையை கொடுக்கிறது.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com