what is emotional eating and how to control it all you need to know

Share

சாதாரணமாக பசி வரும் நேரத்தில் உனவுகள் அல்லது ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவது இயல்பானது. ஆனால் ஒரு சிலர் தாங்கள் வருத்தமாக அல்லது சோகமாக இருக்கும் போது ஆறுதலுக்காக சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

உடல் பசிக்காக சாப்பிடாமல் சிலர் உணர்ச்சிகளை அடக்க அல்லது அதிலிருந்து மனதை திசை மாற்ற சாப்பிடுவார்கள். அதாவது எதிர்மறை உணர்ச்சிகளை அடக்க உணவை ஒரு வழியாக சிலர் பயன்படுத்துகிறார்கள். இதுவே உணர்ச்சிவசப்பட்ட உணவு அதாவது எமோஷனல் ஈட்டிங் (Emotional Eating) என்று குறிப்பிடப்படுகிறது. பதற்றம், கோபம், பயம், மனச்சோர்வு, தனிமை அல்லது சலிப்பு போன்ற எதிர்மறை எமோஷன்களை அடக்க அல்லது அமைதிப்படுத்த பலரால் எமோஷனல் ஈட்டிங் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

எமோஷனல் ஈட்டிங் பழக்கம் பெரும்பாலும் அதிகப்படியான உணவு சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஹோலி சோக்கோலன் இதுபற்றி கூறுகையில் எமோஷனல் ஈட்டிங் செய்பவர்கள் உண்மையான பசிக்காக சாப்பிடாமல், எப்போதெல்லாம் சோகத்தில் அல்லது மனஅழுத்தத்தில் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றார். பெரும்பாலான மக்கள் உடல் பசி மற்றும் உணர்ச்சி பசிக்கு இடையிலான வித்தியாசத்தை வேறுபடுத்தி பார்க்க தவறிவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எடை பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள எமோஷனல் ஈட்டிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஹோலி சோக்கோலன். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு ஒரு ஃபுட் டைரி எழுத சொல்கிறார். ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களின் விரிவான தினசரி பதிவு இந்த ஃபுட் டைரியில் இடம்பெற வேண்டும் என்கிறார்.

தொப்பையில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் 6 Plank Workouts..!

எமோஷனல் ஈட்டிங் குறிப்பாக நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது அல்லது உண்மையில் பசி இல்லாத போது கூட ஸ்னாக்ஸ்களை எடுத்து கொள்ளும் போது ஃபுட் டைரியில் குறித்து வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் ஒருவர் தங்களைத் தாங்களே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நான் எப்படி உணர்கிறேன்..? என்று ஒருவர் அவரை அவரே கேட்டு கொள்ள வேண்டும். இந்தக் கேள்விக்கான பதிலை எழுத வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எமோஷனல் ஈட்டிங் கொண்ட நபர் அவரை அவரே அடையாளம் காண உதவும். வேலை அழுத்தம், நிதிச் சிக்கல்கள், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள், உறவில் எழும் சிக்கல்கள் போன்ற காரணங்களால் கூட எமோஷனல் ஈட்டிங் பழக்கம் ஏற்படலாம்.

எனவே வீட்டில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ்களை மட்டுமே வைத்திருப்பது எமோஷனல் ஈட்டிங்கால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்க உதவும் என்கிறார் சோக்கோலன்.

சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் 7 நம்பமுடியாத நன்மைகள் : மிஸ் பண்ணாம குடிங்க..!

எல்லாவற்றையும் விட முக்கியமானது உடலில் பசியே இலலத போது சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தால், ஒருவர் தனது கவனத்தை திசை திருப்புவது முக்கியம். பிடித்த பாடலை கேட்பது, குளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சம் 15 நிமிடங்களில் சப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்விலிருந்து விடுபட்டுவிடலாம் என்று கூறி உள்ளார்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com