Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

Share

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் வாக்ளிக்கும் வகையில் 1,354 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாக்குப்பதிவு

அதேபோல் கேரள மாநிலத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களிக்க இலவச பேருந்து வசதி முதல் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்த நிலையில், 64.71 சதவிகிதமாக பதிவாகியிருக்கிறது. கேரள தேர்தல் வரலாற்றில் மிகவும் குறைவான வாக்குப்பதிவு சதவிகிதம் கொண்ட தேர்தலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய வயநாடு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி எம்.பி யாக ராகுல் காந்தி பதவி வகித்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி வயநாடு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்கள் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதையும் ராஜினாமா செய்தார்.

நவ்யா ஹரிதாஸ்

பிரியங்கா காந்திக்கு மக்களிடம் நேரடி தொடர்பு கிடையாது. இதெல்லாம் வாக்குப்பதிவு சரிந்ததற்கு முக்கிய காரணம். அதேபோல் வயநாடு நிலச்சரிவின் தாக்கம் இன்னும் அகலவில்லை. ஓட்டளிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com