அவரைத் தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, ”படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையா சார்கூட முதன்முதலாக இணைகிறேன். படம் அருமையாக இருக்கிறது. கார்த்தி, சூர்யா, நான் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரிதான். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம்வரை என்பது மிகப்பெரிய பயணம். ஹிட்டடிக்க வேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் பண்ண வேண்டும் என்றுதான் வேலை பார்த்துள்ளேன்.
பள்ளியில் ஹவுஸ் கேப்டன் கார்த்திதான். நான் ஷூ அணியாமல் செல்வேன். அவர் பெர்ஃபெக்ட்டாக பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று கூறுவார். என்னை ஓடவைப்பார். அன்றைக்கு ஓடவைத்ததற்கு நீ இன்று ஆட வேண்டும் என்று பாடல்களைக் கொடுத்துள்ளேன்” என்று அரங்கத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
அதனை அடுத்து, ”டிரக் டீலர் என்று மக்கள் என்னைக் கூறுவது தெரியும். அதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இசையினால இவ்ளோ இணைந்திருக்கோம்ன்னு நினைக்கறப்ப மகிழ்ச்சியாக இருக்கு. மதுரைக்குப் போறீங்க… வேட்டி, சட்டைதான் போட வேண்டும் என்று என் மனைவி கூறினார். எனக்கு இப்போ எல்லா ஷூட்டுக்கும் காஸ்டியூம் டிசைனர் என் மனைவிதான்” என்று புன்னகையுடன் விடைபெற்றார் யுவன்.