Virat kohli will back to his form as run machine in asia cup said harbhajan singh

Share

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி, தற்போது போதிய ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி. அதுதான் அவர் அடித்த கடைசி சதமாக அமைந்துள்ளது.

தற்போது கேப்டன் பொறுப்பும் இல்லாத நிலையில், பேட்டிங்கில் ஜொலிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் பேட்டி அளித்திருந்த விராட் கோலி, போதிய மன வலிமையில் தான் இல்லாமல் இருந்ததாகவும், இதை சொல்வதற்கு தயக்கம் ஏதும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

Asia Cup 2022 : இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

இந்நிலையில் விராட் தனது 100வது 20 ஓவர் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக களம் இறங்கவுள்ளார். இன்றைய ஆட்டத்திலிருந்து அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

வீரராகவும் இருந்து கொண்ட அணியின் கேப்டனாக இருப்பது என்பது மிகப் பெரிய விஷயம். கோலி ஏராளமான ரன்களை குவித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு நல்லபடியாக அமையவில்லை. அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவரது முகமே காட்டி விடுகிறது.

இப்போது கேப்டன் பொறுப்பு இல்லாததால் அவருக்கு ப்ரஷர் இருக்காது. அவர் இப்போது ரிலாக்சாக இருப்பதை பார்க்க முடிகிறது. அவர் என்னை சந்தித்தபோது, அணிக்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்ய  விரும்புவதாக கூறியிருந்தார்.

ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் : இந்தியா – பாக். மேட்ச் குறித்து புஜாரா கருத்து

விராட்டுடைய உடற்பயிற்சி முறைகள் ஏதும் மாறவில்லை. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார். கிரிக்கெட் ஜாம்பவான்கள் எல்லோருடைய கெரியரிலும் மோசமான காலங்கள் இருந்திருக்கும். அவற்றை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். அதேபோலத்தான் விராட் கோலியும்.

ஆசியக் கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மீண்டும் பழைய கோலியாக ரன்மெஷினாக ஃபார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com