Virat kohli should not come to form agianst Pakistan says former captain wasim akram

Share

விராட் கோலி நவம்பர் 2019 முதல் சர்வதேச சதம் அடிக்கவில்லை. 2021 முழுவதும் அவர் நிறைய அரை சதங்கள் அடித்திருந்தாலும், முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தாலும், இந்த ஆண்டு அவரது ஃபார்ம் பெருமளவு சரிந்துவிட்டது, அதுதான் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு  வழிவகுத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், கோலியின் சமீபத்திய ஆட்டத்தை விமர்சிப்பவர்களை விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வாசிம் அக்ரம் கூறியதாவது: “கடந்த ஆண்டு முதல் இந்திய ரசிகர்களிடமிருந்து, விராட் கோலிக்கு எதிராக பெரும்பாலான ரசிகர்கள் பேசி வருகின்றனர். விராட் கோலியை தேவையில்லாமல் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கு வயது வெறும் 33, அவர் நவீன காலத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். டி20 உட்பட அனைத்து வடிவங்களிலும் அவரது சராசரி 50. அவர் இன்னும் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார், அவர் இன்னமும் கூட சிறந்த பீல்டர்களில் ஒருவராக இருக்கிறார்.

Also Read : இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஷாஹின் அப்ரீடி இல்லையே – இன்சமாம் உல் ஹக் வருத்தம்

ஃபார்ம் தற்காலிகமானது, தரம் என்பது நிரந்தரமானது, அதுதான் விராட் கோலி. அவர் மீண்டு வருவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மீண்டும் பார்முக்கு வந்து விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்,” என்று வாசிம் அக்ரம் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை டி20 தொடரில் இம்மாதம் 28ம் தேதி மோதுகின்றனர். இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com