இவ்விருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. “சிராஜும், பிரசித்தும் இருப்பதால் கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது” என்று கேப்டன் சுப்மன் கில் கூட இந்த வெற்றிக்குப் பின்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிராஜின் கிரிக்கெட் கரியரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் விராட் கோலி அவரைப் புகழ்ந்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கோலி, “இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது.
சிராஜ் மற்றும் பிரசித்தின் மன உறுதிதான் இத்தகைய அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்திருக்கிறது.
குறிப்பாக, அணிக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பவர் சிராஜ். அவரை நினைத்து சந்தோஷப்படுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
கோலியின் இத்தகைய பாராட்டைத் தொடர்ந்து, “என்மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என ட்வீட் செய்திருக்கிறார் சிராஜ்.