டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசிய அப்ரிடி, “கோலியைப் பற்றி நிறைய கூறலாம். அவர் மிகவும் தீவிரமானவர்.
சில நேரங்களில் சர்ச்சைக்குரியவர். எதுவாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியாது.
தனது அணிக்காக அனைத்தையும் அவர் செய்தார். தனியாளாகப் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.

அவரைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். முன்பு அவர் மிக ஆக்ரோஷமாக இருப்பார்.
ஓருமுறை சுனில் கவாஸ்கர் கூட, அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது நியாபகமிருக்கிறது.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு கோலி நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார். அதிகப்படியான மரியாதைக்கு அவர் தகுதியானவர்.” என்று கூறினார்.