இந்த நிலையில், நடந்து முடிந்த டி20 உலகோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட கவுதம் கம்பீர், ஒருநாள் போட்டியில் தான் பார்த்ததிலேயே ஒரு இந்திய பேட்ஸ்மேனின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என விராட் கோலியின் இன்னிங்ஸை அவரிடமே தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, இருவருக்குள்ளான கலந்துரையாடல் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் விராட் கோலியிடம் கவுதம் கம்பீர், “நீங்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்கும்போது உங்களுக்கு 24 அல்லது 25 வயது இருந்திருக்கும். இருப்பினும், டெஸ்ட் அணியில் மிக பலமான பவுலிங் யுனிட்டை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி என்பது 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் கிடைக்கிறது. அந்த வகையில், அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.
அதனால்தான், இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக நீங்கள் திகழ்கிறீர்கள். மேலும், உங்களின் அணுகுமுறை வெளிநாடுகளில் போட்டிகளை வெல்ல உதவியது. அதேசமயம், ஒருநாள் போட்டியில் நான் பார்த்தவரையில் ஒரு இந்தியரின் சிறந்த இன்னிங்ஸ் என்றால், அது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை சேஸிங் செய்யும்போது நீங்கள் 183 ரன்கள் அடித்த இன்னிங்ஸ்தான்” என்று கூறினார்.
ஒருநாள் போட்டியில் எந்த இந்திய வீரரின் இன்னிங்ஸ் சிறந்த இன்னிங்ஸ் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்.