கோலி பேசியதாவது, “நாங்கள் மூன்று பேரும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஆண்டுகளை ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்காக அர்ப்பணித்தோம், ஆனால், அது கைக்கூடாமல் போனது. இந்த கோப்பை அவர்களுடையதும் கூட, அவர்கள் தங்கள் முழு மனதையும் உயிரையும் இதற்காக கொடுத்திருக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்கா தொடர்ந்து மைதானத்திற்கு வந்து பெங்களூரு அணிக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். 11 வருடங்களாக பல கடினமான போட்டிகளை நேரில் பார்த்துள்ளார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார். மேலும், அவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்தான். அதனால் இந்த வெற்றி அவருக்கும் முக்கியமான ஒன்று.’ என்றார்