கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோபொல்டன் கிளப்பில் வின்டேஜ் கார்களின் அணவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ்,பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள் கலந்து கொண்டன. 50 க்கும் மேற்பட்ட கார்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.
இந்த வின்டேஜ் கார்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், அவற்றில் ஏறி அமர்ந்து வாகனத்தை இயக்கி பார்த்தார். பின்னர் கார்களின் அணிவகுப்பை அவர் துவக்கி வைத்தார். இந்த வின்டேஜ் கார்கள் பந்தய சாலை பகுதியில் இருந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வரை அணிவகுத்து சென்றன. கோவை விழாவின் ஒரு பகுதியாக வின்டேஜ் கார்களின் அணிவகுப்பை குழந்தைகள் பார்க்க வேண்டும் என அழைத்து வந்ததாகவும், இந்த மாடல் கார்களை பழைய படங்களில் பார்த்து இருப்போம் அவற்றை நேரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கார்களை பார்வையிட வந்தவர்கள் தெரிவித்தனர்.
கார்கள்
அந்த காலத்தில் வாங்கப்பட்ட கார்களை இவ்வளவு பேர் பழைமை மாறாமல் வைத்திருப்பதே ஆச்சர்யம் எனவும், பியட்,பென்ஸ் என பழைய கார்களை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது எனவும் பார்வையார்கள் தெரிவித்தனர்.
வின்டேஜ் கார்கள் அணிவகுப்பில் பழமையான காருடன் கலந்து கொள்வதே பெருமைக்குரியது என இந்த அணிவகுப்பிற்கு காருடன் வந்த உரிமையாளர்களும் தெரவித்தனர். யங் இந்தியன்ஸ் என்ற கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் நடத்தும் கோவை விழா ஏப்ரல் 10-ஆம் தேதி துவங்கி 17-ம் தேதி வரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.