லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலான 23 கோடி ரூபாயை நெருங்கியது. அதேபோல முதல் வார முடிவில் அண்ணாத்த, பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் முதல் வசூல் சாதனையை முறியடித்தது.
Also read… ஜூலையில் வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள வட்டம்
முதல் மூன்று நாட்கள் பெரும் வசூலை ஈட்டியதால். விக்ரம் படம் நிச்சயம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும் என சினிமா துறையினர் கணித்தனர். அந்த வகையில் விக்ரம் வெளியாகி 25 நட்கள் கடந்த நிலையிலும் ரசிகர்கள் வருகை குறையமால் உள்ளது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் நான்காவது வார இறுதி நாட்களில் அரங்கம் நிறைந்த காட்சிகள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் கமலின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
The full video will be out tomorrow ✨@ikamalhaasan #vikram #Vikram25Days pic.twitter.com/r1YABn9RSt
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 27, 2022
உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 200 கோடியை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.