Vikram: “ கமல் சாரோட சேரப் போறேன்; மதுரையைக் கதைக்களமா வச்சு படம் பண்ணனும்னு ஆசை” -பா.ரஞ்சித் |pa ranjith speech at vikram movie audio launch

Share

‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்து தான் கமல் உடன் இணையவிருக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.

“லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க. அப்படி எதுவும் கிடையாது. ‘விக்ரம்’ அது எல்லாத்தையும் உடைச்சு பெரிய வெற்றிபெறும்னு நம்புறேன். லோகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்களை நம்பி நிறைய பேர் காத்திருக்கோம்.” எனப் பேசினார்.

மேலும், “பழைய விக்ரம் அருமையான படம். மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. விருமாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்” என அதிகாரபூர்வமாக விக்ரம் விழா மேடையில் அறிவித்துள்ளார் பா.ரஞ்சித்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com