தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்டரி 3 சிக்ஸர்களும் அடங்கும். ஆரம்பத்தில் வார்னர் அதிரடி காட்ட இறுதி ஓவர்களில் அவருடன் இணைந்து ரோவ்மேன் பவல் 35 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அந்த 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி நிக்கோலஸ் பூரான் மட்டும் 62 ரன்களை எடுத்தார்.
Also Read : விருத்திமான் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை – பிசிசிஐ அதிரடி
இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமார் ஓவரில் வார்னர் அடித்த பவுண்டரி ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இடது கை பேட்ஸ்மேனான வார்னர் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை வலது கைக்கு மாறி டீப் ஃபைன் லெக்கில் பவுண்டரி அடிப்பார். இதை பார்த்து புவனேஸ்வர் குமார் சற்று திகைத்து நின்றார்.
This amazing shot by @davidwarner31!! What do you call it?
A reverse glide?Let’s have your take, @KP24/@wvraman? pic.twitter.com/32pbYu9CN4
— Joy Chakravarty (@TheJoyofGolf) May 5, 2022
கடந்த ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த சீசனில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் கேப்டன் பொறுப்பு கேன் வில்லியம்சன்னி்டம் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவர் அணியில் இடம் பெறாமல் ஒதுக்கியும் வைக்கப்பட்டார். பின்னர் அவரை அணியிலிருந்து சன்ரைசர்ஸ் விடுவித்தது.
இந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர் தனது பகையை தீர்த்து கொள்வது நேற்றைய போட்டி அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.