முதல்முறை இந்திய அணியில் இடம்பெற்றதை விட கம்பேக் கொடுப்பது கடினமானதாக இருந்தது. என்னைப் பற்றிய பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பயிற்சிகள், ரொட்டீன் எல்லாவற்றையும் மாற்றினேன். அதிகப்படியாக பயிற்சி செய்தேன். ஆனால் மீண்டும் அணியில் கூப்பிடுவார்களா என்றுகூட தெரியாமல் பயிற்சி செய்தேன்.
நல்லபடியாக ஐபிஎல் வெற்றிபெற்றோம். அதனால் மீண்டும் அணிக்குள் வந்தேன்.” என்றார்.
மேலும் அவர் எதிர்கொண்ட மிரட்டல்கள் குறித்து, “2021 உலகக்கோப்பைக்குப் பிறகு மிரட்டல் அழைப்புகள் வந்தது. “இந்தியா வந்திடாதே, உள்ள வரவிட மாட்டோம்’ என மிரட்டினர். ஏர்போர்டில் இருந்து பைக்கில் இரண்டுபேர் வீடுவரை ஃபாலோ செய்தனர்….” எனக் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, 3 போட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டு 9 விக்கெட்கள் வீழ்த்தினார். வரும் மார்ட் 21ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2025ல் இவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.