ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார்.
ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.
லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார்.
எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.
அனைவரும் வைபவ்வை நெகிழ்ந்து பாராட்டினர். அந்தப் போட்டியில் 34 ரன்களில் அவுட்டானப்போது சூர்யவன்ஷி கண்களைத் துடைத்துக்கொண்டே வெளியேறினார்.