ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய உமேஷ் யாதவ், “மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடைந்திருக்கின்றன.
இப்போதைய நிலையில் என்னை நானே தேர்வு செய்ய முடியாது. சில போட்டிகளில் நான் விளையாட வேண்டும், உடற்தகுதி பெற வேண்டும்.
நான் மீண்டும் வருவதற்குச் சவாலான கிரிக்கெட் ஆட வேண்டும். உடற்தகுதி பெற்று மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பதுதான் என்னுடைய முயற்சி.” என்று கூறினார்.

மேலும், தனது கரியர் குறித்து பேசிய உமேஷ் யாதவ், “நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
இயல்பாகவே நான் வேகப்பந்து வீச்சாளர். சிறுவயதிலிருந்தே வேகமாகப் பந்துவீசி வருகிறேன். நான் எந்த அகாடமிக்கும் சென்றதில்லை.
அதனால்தான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் மகன் இங்கே இந்தியாவுக்காக விளையாடுகிறான். என்ன விஷயம் நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.