UAE ILT T20 Narine, Russel, and Bairstow in KKR’s Abudhabi Knight Riders, ADKR Riders – News18 Tamil

Share

யுஏஇ இண்டர்னேஷனல் டி20 லீக் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்களின் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் அகீல் ஹுசைன், வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால், இலங்கை பெட்டர் சரித் அசலங்கா ஆகியோரும் ஆடுகின்றனர்.

14 வீரர்கள் பட்டியலில் இலங்கை ஆல்ரவுண்டர் செகுகே பிரசன்னா, வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா, அயர்லாந்து அதிரடி வீரர் பால் ஸ்டர்லிங், தென் ஆப்பிரிக்காவின் கொலின் இங்கிரம் ஆகியோரும் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கெனவே கரீபியன் லீகில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் நரைன் ஆடிவருகிறார்.

யுஏஇ இண்டெர்னேஷனல் லீகில் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்களான ரிலையன்ஸ் அணியும் எம்.ஐ. எமிரேட்ஸ் அணியை வாங்கியுள்ளது, அதில் ஆடும் வீரர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி இதுவரை ஒப்பந்தம் செய்த வீரர்கள் விவரம் வருமாறு:

சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், அகேல் ஹொசைன், ரேமன் ரெய்பர், கென்னர் லூயிஸ், ரவி ராம்பால் (அனைவரும் மேற்கிந்திய தீவுகள்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து), லஹிரு குமார, சரித் அசலங்க, சீக்குகே பிரசன்னா (இலங்கையில் இருந்து மூவர்) , கொலின் இங்க்ராம் (தென்னாப்பிரிக்கா), அலி கான் (அமெரிக்கா), பிராண்டன் குளோவர் (நெதர்லாந்து).

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com