கம்பு ரொட்டி : கம்பு தினை குளுடன் இல்லாத தானியமாகும். உங்கள் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கம்பு ரொட்டியில் 97% கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. வயிறு நிறைவாக இருக்கும். மேலும் இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவும் மேம்படும். கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

கேழ்வரகு ரொட்டி : கேழ்வரகு சூப்பர் ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். கேழ்வரகில் உள்ள மெக்னீசியம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதோடு உடல் பருமனைத் தடுக்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கால்சியமும் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு நல்லது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வாழைப்பழம் : ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..?
கொண்டைக் கடலை மாவு மற்றும் தினை வகை ரொட்டி : கொண்டைக்கடலை அல்லது தினை வகை மாவு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஹெல்த்லைன் கூற்றுப் படி, கொண்டைக்கடலை மாவில் வெள்ளை மாவை விட 25 சதவிகிதம் குறைவான கலோரிகள் உள்ளன. எனவே இது எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

பார்லி மாவு ரொட்டி : எடையை குறைக்க, கோதுமைக்குப் பதிலாக பார்லி மாவு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வகை மாவுக்கு, 10 கிலோ கொண்டைக்கடலை மாவு அல்லது கோதுமை மாவு மற்றும் 2 கிலோ பார்லி சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டிகளை சாப்பிடுவது உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. பார்லியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.செரிமானம் , எடை இழப்பு ,கொலஸ்ட்ராலை குறைப்பது ஆரோக்கியமான இதயம் என பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.