அதிமுகவில் பதவிக்காக சண்டை வரும் என்று அன்றே கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை விரைவில் பெறப்போகின்றனர். விரைவில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் “வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரக்கூடும் அதற்கான பணிகளை தற்போது இருந்தே துவங்குங்கள். குக்கர் சின்னத்தை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்” என்றார்.
வருங்கால தேர்தலில் பணம் வேலை செய்யாது. உள்ளாட்சி தேர்தலில் நமது பங்காளிகள் பணம் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை என அதிமுகவை மறைமுகமாக சாடினார். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் வரும் 15ஆம் தேதி நமது கட்சியில் பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பி.எஸ் ஆதரவு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் எனது நீண்ட நாள் நண்பர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் அரசியல் ஏதும் இல்லை” என்றார்.
ஓ.பி.எஸ் ஆதரவு கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யூகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஒரு தனி இயக்கம் எனக் கூறினார். மேலும் சசிகலா அதிமுக வுடன் இணைவாரா இல்லை உங்களுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கும் யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.