இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்த காவல் துறையினர் அனுமதிப்பதாகவும், இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு கருணை காட்ட கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
விதிமீறும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக டிசம்பர் 21ம் தேதி அறிக்கை அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.