Toned, Skimmed, Full Cream Milk… ஆவின் பால் பாக்கெட் கவர்களின் அர்த்தம் தெரியுமா?|#Visual Story

Share

காலையில் எழுந்ததும் நாம் அனைவரும் அன்றாடம் நுகரும் பொருள்களுள் முக்கியப் பங்கு வகிப்பது பால்.

பால், பால் பொருள்களின் சிறப்பம்சங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக பால் தினம் கொண்டாட வேண்டும் என்று 2001-ம் ஆண்டு ஐ.நா அறிவித்தது.

இதனையடுத்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவின்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் Toned, Full Cream Milk எனப் பலவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் என்ன?

கால்நடை

நாம் வாங்கும் அனைத்து பால்களிலுமே எருமைப்பாலும் பசும்பாலும் கலந்திருக்கும். அதில் இருக்கும் கொழுப்புச்சத்தைப் பொறுத்தே அவை வகை பிரிக்கப்படுகின்றன.

நீல நிறம் (Toned Milk) – பசும்பாலின் அளவு சற்று அதிகமாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. 100 கிராம் பாலில் 4 கிராம் கொழுப்புச்சத்து, 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் கார்போஹைட்ரேட், 700 மில்லி கிராம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

ஆரஞ்ச் நிறம் (Full Cream Milk) – இதில் கொழுப்புச்சத்து சிறிது குறைவாக இருக்கும். 100 கிராம் பாலில் 3.5 கிராம் கொழுப்புச்சத்து , 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் கார்போஹைட்ரேட், 700 மில்லி கிராம் தாது உப்புகள் உள்ளன.

பிங்க் நிறம் (Double Toned Milk) – கொழுப்புச்சத்து மிகக் குறைவாக இருக்கும் என்பதால் எடை குறைய நினைப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். 100 கிராம் பாலில் 1.5 கிராம் கொழுப்புச்சத்து , 3.4 கிராம் புரதம், 4.9 கிராம் கார்போஹைட்ரேட், 740 மில்லி கிராம் தாது உப்புகள் உள்ளன.

பச்சை நிறம் (Standardised Milk) – கொழுப்புச்சத்து 4.5 கிராம், இதர சத்துகள் 8.5 கிராம் கொண்டது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com