Tirupati Laddu: `ஏன் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள்’ – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி | Why are you spreading apprehensions, prakash raj asks andhra DCM pawan kalyan in tirupati laddu issue

Share

முதலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்தார்.

Tirupati Laddu - திருப்பதி லட்டு - சந்திரபாபு நாயுடுTirupati Laddu - திருப்பதி லட்டு - சந்திரபாபு நாயுடு

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

அதைத்தொடர்ந்து, தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் இதில் சோதனை செய்ததில், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் உட்பட விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக முடிவுகள் வெளியானது. இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டி, சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட பிரச்னைகள், ஆந்திரா வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்னைகள் ஆகியவற்றைத் திசைதிருப்புவதற்காக சந்திரபாபு நாயுடு கடவுளை வைத்து அரசியல் செய்வதாக, அவரின் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜெகன்மோகன் ரெட்டிஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி

அதோடு, `திருப்பதி லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருள்களையும் “NABL -National Accreditation Board for Testing and Calibration Laboratories’ ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்புதான் அவற்றைப் பயன்படுத்த முடியும்’ என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com