tips drinking water properly ayurveda

Share

இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான மருத்துவ முறைகளில் ஆயுர்வேதமும் ஒன்று. ஆயுர்வேத மருத்துவம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையோடு ஒன்றிணைக்கப்பட்ட பழக்கங்களை வலியுறுத்துகிறது. பருவநிலை மாற்றம், அந்தந்த பருவத்தில் விளையும் உணவுகள் காய்கறிகள், சீதோஷ்ண நிலை, நம்முடைய உடலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உதாரணமாக, பித்தம் அதிகமாக இருக்கும் ஒரு நபர் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டும், தவிர்க்க வேண்டும்.

இயற்கையோடு இணைந்து வாழும் போது எந்தவித நோயும் குறைபாடும் ஏற்படாமல் மனிதர்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதையே ஆயுர்வேதம் கூறுகிறது. அதே போல, ஆயுர்வேதத்தின்படி தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று கூட சில வழிமுறைகள் இருக்கின்றன. தண்ணீர் குடிப்பதற்கு கூட விதிமுறைகளா என்று உங்களுக்குத் தோன்றலாம். எப்படி தண்ணீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது, என்று ஆயுர்வேதம் தண்ணீர் குடிப்பதைப் பற்றி வலியுறுத்தி உள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆயுர்வேத மருத்துவரான, ரேகா ராதாமணி ‘ஆரோக்கியமாக இருப்பதற்கு லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்க வேண்டாம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்திருந்தார்.

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா..?

ஆயுர்வேதத்தில் தண்ணீரின் முக்கியத்துவம்

உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்க, உறுப்புகள் சரியாக இயங்க, சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்று தினசரி குறிப்பிட்ட அளவு நீரை குடிக்க வேண்டும். ஆயிர்வேதத்தில் ‘அக்னி’ என்று கூறப்படும் செரிமான ஆற்றலை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க தண்ணீர் அவசியம். நெருப்பும் நீரும் சரியான அளவில், சமமாக இருக்க வேண்டும். எனவே. அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் போது, உடலில் இருக்கும் மற்ற ஆற்றல்களான நெருப்பு (பித்தம்), காற்று (வாதம்) ஆகியவை பாதிக்கப்பட்டு நீரின் தன்மை (கபம்) அதிகரிக்கும். நீரின் அளவு குறைந்தாலும் பித்தமும் வாதமும் அதிகரித்து, உடல் நலம் பாதிக்கப்படும்.

ஆயுர்வேத முறைப்படி தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?

1. தண்ணீரை எப்போது குடித்தாலும் அவசர அவசரமாக குடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக குடிக்க வேண்டும்.

2. நின்றபடியே தண்ணீர் குடிக்கக் கூடாது. அமர்ந்து கொண்டு குடிக்க வேண்டும்.

3. தண்ணீரை அதிக சூடாகவோ அதிக குளிர்ச்சியாகவோ குடிக்கக் கூடாது. அப்போதைய தட்பவெப்ப நிலையின் படி, தண்ணீர் இயற்கையான குளிர்ச்சியில் எப்படி இருக்கிறதோ அதை குடிக்க வேண்டும். அல்லது, காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.

4. குழாயில் இருந்து நேரடியாக தண்ணீர் குடிக்கக் கூடாது. மண் பானை, காப்பர் பாத்திரம், ஸ்டீல் ஆகிய பாத்திரங்களில் அல்லது குடங்களில் தண்ணீர் சேகரித்து வைத்து அதிலிருந்து தான் குடிக்க வேண்டும்.

செரிமானம் மேம்பட, நான்கு பங்கு நீர் ஒரு பங்காக மாறும் வரை காய்ச்சி ஆற வைத்து அந்த நீரைக் குடித்து வரலாம்.

5. காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.

6. உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்:

நம்முடைய உடல் அமைப்பு தண்ணீரைக் கூட செரிமானம் செய்யும். எனவே, உடலுக்கு எவ்வளவு தேவையோ அது மட்டும் தான் குடிக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது வேறுபடும். நாக்கு வறட்சி, உதடுகள், சருமம் வறண்டு போவது, வியர்வை வராமல் இருப்பது, மலச்சிக்கல், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் ஆகியவை நீங்கள் போதிய அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்.

குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை சீராக்க ஒரு நாளைக்கு 2 முறை பாதாம் சாப்பிட வேண்டுமா..? ஆய்வு சொல்லும் பதில்…

கோடை காலத்தில் வெப்பத்தைத் தணிக்க, வெட்டிவேர் சேர்த்து தண்ணீர் குடிக்கலாம். கோடை தவிர்த்து, மற்ற பருவ காலங்களில் தண்ணீரில் கொஞ்சம் சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடிப்பது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com