Thug Life: “உன்கூட நான் கூடி நடித்திட, எனக்கு படம் ஒண்ணு போதுமா!” – மேடையில் கவிதைச் சொல்லிய அபிராமி |Abirami | Kamal Haasan |Simbu

Share

நடிகை அபிராமி பேசுகையில், “இந்த மேடை கலை கொண்ட்டமாகதான் தெரியுது. இசை வெளியீட்டு விழா மேடை போலவே தெரியல. மணி சார்கூட வேலை பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரெண்டு மூணு முறை நடக்க வேண்டியது. ஆனால், மிஸ் ஆகிடுச்சு. நான் ஒரு பெண் ஏகலைவன் மாதிரி . கமல் சார் அன்பான துரோனாச்சாரியார். எங்ககிட்ட கட்டவிரல் கேட்காத துரோனாச்சாரியார். “என்றவர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கவிதை ஒன்றைச் சொன்னார். அவர், “கண்ணுக்கு மை அழகு.

Abirami - Thug Life Audio Launch

Abirami – Thug Life Audio Launch

கவிதைக்குப் பொய் அழகு. நம் இசைக்கு நீ அழகு. உன்னை ரசிப்பதால் நான் அழகு.”என்றவர் மணி ரத்னத்தை நோக்கி, ” உன்னோடு நான் நடித்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது என் மணியே. “என்றவர் மீண்டும் கமலை நோக்கி, “உன்கூட நான் கூடி நடித்திட, எனக்கு படம் இது ஒண்ணு போதுமா! 100 படம் வேணும் கேக்குறேன் அந்த சாமியை!” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com