this post workout coffee can help you lose weight quickly

Share

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான உணவுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழ்வோர் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த திணறி வருகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை குறிப்பாக உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் நீங்கள் ஒரு காஃபி பிரியராக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கப் காஃபியாவது, உங்களது வழக்கத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் போது காஃபி பழக்கம் இருக்கும் சிலர் குற்றஉணர்ச்சிக்கு ஆளாவார்கள். இவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்கள் காஃபியை ஆரோக்கியமாக்குவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள். உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எளிதாக கரைப்பதற்கான எளிய தீர்வை இங்கே காஃபி வடிவில் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஒரு காபிஃயை சில சமையலறை பொருட்களை சேர்த்து தயார் செய்து குறைய மறுக்கும் தொப்பையை குறைக்கலாம். வெயிட்லாஸ் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உங்கள் பேக்கேஜ்ட் வெயிட்லாஸ் டிரிங்க்ஸ்களைவிட சிறந்த பானத்தை இங்கே பார்க்கலாம்.

காஃபியை எடை குறைக்கும் பானமாக எப்படி மாற்றுவது.!

காஃபியில் வெண்ணெய் சேர்ப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? சற்று அதிர்ச்சி தானே அடைகிறீர்கள். என்னது காஃபியில் வெண்ணெயா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மையில் தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் உள்ளிட்டவற்றை பானங்களில் சேர்ப்பது எடையை குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் செயின் ட்ரையசில்கிளிசரால்கள் மற்றும் வெண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பானத்தில் புரத அளவை அதிகரிக்கிறது. உங்களை முழுமையாக வைக்கிறது.

இங்கே பட்டர் காஃபி பற்றி தான் பார்க்க போகிறோம். இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் இல்லாத ஒரு சரியான பானம் என்பதால் தொப்பையை குறைக்க உதவும். ஆனால் நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், பட்டர் காஃபியுடன் கார்போஹைட்ரேட்ஸ் இல்லாத டயட்டை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கொரியர்கள் எடையை நிர்வகிப்பதிலும் கில்லாடிகள்… அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் இவைதான்..!

பட்டர் காஃபி செய்முறை..

தேவையான பொருட்கள்:

* 1 ½ கப் தண்ணீர்

* 2 டீஸ்பூன் பட்டர் (வெண்ணெய்)

* 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

* 1 டீஸ்பூன் காஃபி பவுடர்

* 1 சிட்டிகை இலவங்கப்பட்டை

* 1 சிட்டிகை ஜாதிக்காய் (விரும்பினால்)

ஒரு பாத்திரத்தை எடுத்து 1 டீஸ்பூன் காஃபியுடன் 1 ½ கப் தண்ணீரைச் சேர்த்து, கலவையை காய்ச்சுங்கள். இதற்கிடையில் ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் (விரும்பினால்) சேர்த்து, ஒரு ஹேண்ட் விஷ்க் (hand whisk) பயன்படுத்தி நன்றாக கலக்கவும். இந்த கலவை நுரைத்ததும் இதனை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, நீங்கள் தண்ணீர் மற்றும் காஃபி சேர்த்து தயாரித்த வெதுவெதுப்பான கலவையில் (1 கப்) ஊற்றி நன்கு கலக்கவும். இந்த பானம் தொப்பையை சிரமமின்றி 1 வாரத்தில் குறைக்க உதவும். ஆனால் கூடவே சரியான டயட்டை பின்பற்றுவது முக்கியம்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com