the right time to eat fruits and must avoid fruits in empty stomach

Share

ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளுடன், பெரியவர்களும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எனவேதான் அவை எந்த நோயையும் எதிர்த்துப் போராட உதவும் என நம்புகின்றனர்.

இப்படி பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் இந்தப் பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள். சிலர் உணவு சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர்.

அதே நேரத்தில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் சில பழங்களும் உள்ளன. இப்படி பல கேள்விகள் சுற்றிக்கொண்டிருக்க அதற்கான சரியான விடையை இங்கு பார்க்கலாம்.

ஹெல்த்லைன் படி, அந்நாளின் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம். பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றை நாள் முழுவதும் உட்கொள்ளலாம். குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நோய்க்கு சிகிச்சையில் இருந்தால் குறிப்பிட்ட அளவுடன், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பழங்களை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

எடை இழப்பின்போது :

பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். எனவே, எடையைக் குறைக்கும் போது பழங்களை மதியம் 11 முதல் 12 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 12 மணிக்கு பழங்களை சாப்பிடுவது உங்களை முழுதாக உணர வைக்கும், இதன் காரணமாக மதிய உணவில் குறைவான கலோரிகளை சாப்பிடலாம்.

காலையில் பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? ஆயுர்வேதம் சொல்லும் எச்சரிக்கை…

இது தவிர, பழங்கள் இனிப்பானவை என்பதால் அதிக கலோரிகளை கொண்டிருக்கும். எனவே சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடுவதால் உடலில் கூடுதல் கலோரிகள் சேரும். அதேசமயம் இன்சுலின் அளவும் அதிகரிக்கும். எனவே உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் பழங்கள்

கர்ப்ப காலத்தில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம் என்றாலும், உணவு சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படும். எனவே, கர்ப்ப காலத்தில் காலை உணவுக்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயின் அபாயமும் அதிகமாக இருப்பதால், கலோரிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன நேரிடும்.? இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது – எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்.!

இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது :

– வாழைப்பழம்

– பேரிக்காய்

– ஆரஞ்சு

– சாத்துக்குடி

– மாம்பழம்

– திராட்சை

– லிச்சி

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com