tender for chennai marina to guindy flyover feasibility study is open

Share

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை, ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை துவக்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை தயார் செய்வதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை, ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதையும் வாசிக்க: தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!

அதில் முதற்கட்டமாக சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. 180 நாட்களுக்கு உள்ளாக ஒரு விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Siddharthan Ashokan

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com