இந்த அதிரடி ஸ்கோரை விரட்டிப் பிடிக்க அதிரடி நாயகன் ஜெயசூர்யா நினைத்தால்தான் முடியும் என்றிருந்த நிலையில் அவரை மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே தன் சிறப்பான ஃபீல்டிங்கால் ஆட்டமிழக்க செய்தார் ஸ்ரீநாத். வெறும் மூன்றே ரன்களுக்கு ஜெயசூர்யா ரன் அவுட் ஆக ஆரம்பத்திலேயே ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்துவிட்டது. சிறு சிறு பார்ட்னர்ஷிப்புகள் இடையில் அமைந்தாலும் 43-வது ஆல்-அவுட்டானது இலங்கை. 154 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியை வென்றது இந்தியா.
இதன் பிறகே கங்குலி, டிராவிட் ஆகிய இருவரின் இடங்களும் இந்திய அணியில் அசைக்க முடியாதவையாக மாறின. பிற்காலத்தில் இருவருமே இந்திய அணியின் கேப்டகளாக மாறினர். ஆட்டம் முடிந்த பிறகு, “இந்த தோல்வியிலிருந்து அடுத்த எப்படி பயணப்படப் போகிறீர்கள்? ” என்ற கேள்விக்கு ” அடுத்து வீட்டுக்கு தான் பயணப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார் இலங்கை கேப்டன் ரணதுங்கா. அந்த ஆட்டத்தை அவரால் மட்டுமல்ல யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.