இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் தனுஷ் கோட்டியன் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. அஷ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் இந்த தனுஷ் கோட்டியன் யார் என்பதைப் பார்ப்போம்.
26 வயதான தனுஷ் கோட்டியன் மும்பையைச் சேர்ந்தவர். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளையும் 2 சதங்களுடன் 1,525 ரன்களையும் குவித்திருக்கிறார். 2023 – 24 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டிராபியில் சிறந்த ஆட்டக்காரருக்கான தொடர் நாயகன் விருதை தனுஷ் கோட்டியன் பெற்றிருக்கிறார்.