இன்றைய டாப் 10 செய்திகள்
1) டெல்லி ராஜப்பாதையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் குடியரசு தலைவர்.
2) சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு.
3) தேசிய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை தொடங்குவோம். சமூக நீதி குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
4) கொரோனா குறைந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுது்த வாரம் பள்ளிகளை திறக்க பரிந்துரைப்போம். அமைச்சர் அன்பில் மகேஷ்
5) காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 இடங்களில் ரூ.424 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள்.
6) தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியை மதம் மாற்ற முயற்சிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் விளக்கம்.
7) தற்கொலை செய்து தஞ்சாவூர் மாணவி 2020-ம் ஆண்டில் புகார் அளித்ததாக தகவல். அரியலூர், தஞ்சை எஸ்.பிகளிடம் விசாரணை அறிக்கையை அளிக்க Child Help Line.
8) நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக அண்ணாமலை பேட்டி. வாய் தவறி பேசி விட்டதாகவும் விளக்கம்.
9) பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மேலும் ஒரு ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்.
10) உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்ப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு