விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்..! : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் போராட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணைப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்… மக்களை சமமாக நடத்து ஒரே தேர்வு முறையை நிறுத்து!
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.! மாநில உரிமையை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.