இன்றைய டாப்10 செய்திகள்
1) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சனம் செய்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
2) அரியலூர் மாணவி கடைசி பேச்சை வீடியோ எடுத்தவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
3) அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.
4) குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவிப்பு.
5) நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க தொடரப்பட்ட வழக்கு. தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கைககள் கட்டப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து.
6) சென்னை அருகே திருப்போரூரில் அமைகிறது பிரம்மாண்ட விளையாட்டு நகரம். சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு
7) ஒமைக்ரான் திரபு கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி என்று கருதுவது ஆபத்தானது. உலக சுகாதார மையம் எச்சரிக்கை
8) தமிழகத்தில் 95 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்தி கொள்ளவில்லை. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
9) பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்.
10) தமிழகத்தின் கடலோர மாவட்ங்களில் மழைக்கு வாய்ப்பு. அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல்.