Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 28 – News18 Tamil

Share

இன்றைய டாப்10 செய்திகள்

1) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பழக்கத்துக்கு எதிராக போராட வேண்டும். என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்


2) மின்சார கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடும் வகையில் மொபைல் செயலி அறிமுகம். ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்த ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு.

3) மக்கள்நலன் சார்ந்ததாக அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

4) மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு.ஒருதரப்பினருக்கு ஆதரவாக பேசுமாறு நிர்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு….


5) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்.மாலை 5 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு.


6) உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சு. அதிமுக-வுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனை.


7) கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள், கல்லூரிக்கு வர அறிவுரை.

8) அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள பொறியியல் தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.

9) நடிகர் விஜயின் சொகுசு கார் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டாம். 400 சதவிகித அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.


10) மதத்தின் அடிப்படையில் வெறுப்பை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மீது வழக்குப்பதிவு. பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சட்ட நடவடிக்கை என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com