Tamil Live Breaking News | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Share

29 May 2023 14:34 (IST)

அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அசாம் மாநிலம் கவுகாத்தி – மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

29 May 2023 14:11 (IST)

மத்தியப் பிரதேசத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

29 May 2023 12:49 (IST)

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

29 May 2023 12:47 (IST)

ஜூலை 3-ம் தேதி சந்திரயான் 3 ஏவப்படும்…

ஜூலை 3-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

29 May 2023 12:43 (IST)

சாலை வசதி இல்லாததால் குழந்தை உயிரிழந்த விவகாரம் – ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சாலை வசதியில்லாமல் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலை வசதி குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சாலை வசதியில்லாததால் அவராலும் காரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

29 May 2023 11:14 (IST)

ரூ.2000 நோட்டு மாற்றம்- பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

ஆவணங்கள் இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அனுமதியை எதிர்த்து பாஜக நிர்வாகி அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

29 May 2023 11:00 (IST)

தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்

தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

29 May 2023 10:45 (IST)

விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி-எஃப்-12

வழிகாட்டி சேவைக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் கொண்ட NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

29 May 2023 10:26 (IST)

எங்கள் மீது 7 மணி நேரத்தில் வழக்குப் பதிவு- மல்யுத்த வீராங்கனை வேதனை…

பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷன் மீது வழக்குப் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 7 மணி நேரத்தைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

29 May 2023 09:33 (IST)

அசாமில் நிலஅதிர்வு…

அசாம் மாநிலத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4-ஆக பதிவாகியுள்ளது.

29 May 2023 09:32 (IST)

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20 இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

29 May 2023 09:00 (IST)

ஜப்பான் வர்த்தக அமைப்புத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

29 May 2023 07:19 (IST)

தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் போராட்டம்

விஷச் சாராய விவகாரம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது.

29 May 2023 07:13 (IST)

செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்-12

வழிகாட்டி சேவைக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் கொண்ட NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

29 May 2023 06:42 (IST)

சென்னை – குஜராத் : இன்று பலப்பரீட்சை..

அகமதாபாத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com