Tamil Live Breaking News | பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்

Share

23 Jun 2023 11:29 (IST)

பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்சு

“பாஜக நாடு முழுவதும் மக்களிடையே, வெறுப்பை தூண்டி பிரிவினைவாத அரசியலை செய்கிறது; ஆனால் காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது” என எதிர்க்கட்சிகளின் பாட்னா பொதுக்கூட்டத்தில் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

23 Jun 2023 11:10 (IST)

வரிச்சூர் செல்வத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்…

விருதுநகரில் தன்னுடைய கூட்டாளியான செந்தில்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள வரிச்சூர் செல்வத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர்  கருண் காரட் தலைமையிலான தனிப்படை போலீசார் விருதுநகர் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

23 Jun 2023 10:20 (IST)

பாட்னா சென்றடைந்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்றடைந்தனர்.

23 Jun 2023 09:39 (IST)

டெல்லி அவசர சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன் முடிவு – மல்லிகார்ஜுன் கார்கே

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டெல்லி அவசர சட்ட முன்வடிவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்கிறது. இதனை எதிர்க்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் அவசர சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால் தான் எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என காங்கிரஸிடம் அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு முடிவெடுக்கப்படும் என்றும், பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

23 Jun 2023 08:47 (IST)

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வீட்டில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

23 Jun 2023 07:38 (IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா பங்கேற்கும் : மோடி நம்பிக்கை

பிறகு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் பொருளாதாரத்தையும், உள்ளடக்கிடக்கிய சமூகத்தையும் மேம்படுத்த பாடுபடுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா அவர்களது சிறப்பான முயற்சியை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

23 Jun 2023 06:57 (IST)

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நேற்று இரவு ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விரிவாக படிக்க

23 Jun 2023 06:53 (IST)

எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்குகிறது!

எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

23 Jun 2023 06:43 (IST)

குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் இந்தியாவை வழிநடத்துகிறார் – அமெரிக்காவில் மோடி பெருமிதம்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்களை சந்தித்த பிறகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார்.  ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி,  இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையில் இந்திய மகளிரின் பங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் பழங்குடியின பெண் ஒருவர், குடியரசுத் தலைவராக இந்தியாவை வழிநடத்துவதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

23 Jun 2023 06:20 (IST)

டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற ஐவர் குழு உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு……

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23 Jun 2023 06:16 (IST)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

398வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com