இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்
28 Apr 2023 07:42 (IST)
வேங்கைவயல் – மே 6ஆம் தேதி தனி நீதிபதி விசாரணை
நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் ஓய்வுப்பெற்ற நீதிபதி சத்திய நாராயணா நியமிக்கப்பட்டார்.
இவர் வரும் மே 6ஆம் தேதி நேரில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Apr 2023 07:01 (IST)
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க நேரில் வருகை தரும்படி குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்கிறார்.
