ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து
ஆர்.என்.ரவியை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் சாரல் மழை
சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் வண்டலூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் காலையிலிருந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரண்யால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை..
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் பற்றி முரசொலி கடும் விமர்சனம்
பெரியார், அண்ணா, கலைஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணவேண்டாம் என்று முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து…
சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. அதில் பயணிக்க வேண்டிய 142 பயணிகள், வேறு விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து வினாடிக்கு 651 கன அடியிலிருந்து 547 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது 64.37 டி.எம்.சி நீர் இருப்புள்ளது.
2 நாள் பயணமாக திருவாரூர் செல்லும் முதல்வர்
இரண்டு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார்.
கடலூரில் மீன்களை வாங்க குவிந்த மக்கள்..
மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் மீன் பிடித்து துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் நாகப்பட்டினம், காரைக்கால், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.