T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு – உலகக்கோப்பை முழு விவரம்| Details about ICC T20 World Cup

Share

பங்கேற்கும் 20 அணிகள்…

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத்  தொடரில், 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுடன், அமெரிக்கா, கனடா, நேபாளம், ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன. இந்த உலகக்கோப்பையில் இத்தாலி அணி முதன்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

 4 பிரிவுகள் – கடும் போட்டிகள்!

20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் வீதம் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

 குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து

குரூப் B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குரூப் C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குரூப் D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, சௌத் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com