ஐக்கிய அரபு அமீரக அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. நெதர்லாந்து பந்துவீச, பேட்டிங்கைத் தொடங்கிய அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு எங்கேயுமே பெரிய மொமண்டம் கிடைக்கவே இல்லை. ஆடிய 120 பந்துகளில் 55 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். பவர்ப்ளேயில் எதிர்கொண்ட 36 பந்துகளில் 23 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். இன்னிங்ஸ் முழுவதுமே மொத்தமாகவே 3 பவுண்டரிக்களையும் 3 சிக்சர்களையும் மட்டுமே அடித்திருந்தனர். ஓப்பனிங்கில் இறங்கிய முகமது வசீம் மட்டுமே கொஞ்சம் நேரம் நின்று தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்தார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்களை எடுத்திருந்தார். வேறு எவரிடமிருந்தும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு பங்களிப்பு கிடைக்கவே இல்லை. நெதர்லாந்து சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லீட் 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருந்தார்.
நெதர்லாந்து அணிக்கு 112 ரன்கள் மட்டுமே இலக்கு. எளிதாக வென்றுவிடுவார்கள் என்றே தோன்றியது. ஆனால், நடந்தது வேறு. ஐக்கிய அரபு அமீரக அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை எடுத்து சுவாரஸ்யத்தை கூட்டியது. நெதர்லாந்து சார்பில் லீடும் ஆடாடும் தொடக்கத்தில் ஒரு 27 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இறுதியில் ப்ரிங்கிளும் கேப்டன் எட்வர்ட்ஸூம் 27 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்புக்கு இடைப்பட்ட பகுதி முழுவதிலும் அமீரகமே ஆதிக்கம் செலுத்தியது.
இதே ஓவரில் இறுதியில் 27 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு ஒத்துழைத்த ப்ரிங்கிளின் விக்கெட்டையும் ஜூனைத் எடுத்திருக்கக்கூடும். ஆனால், அவரின் கேட்ச்சை ட்ராப் செய்து சொதப்பிவிட்டனர். இந்த கேட்ச் பிடிப்பட்டிருந்தால் ஆட்டம் அமீரக அணி பக்கமே திரும்பியிருக்கும். இறுதியில் கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் எட்வர்ட்ஸூம் பீக்கும் ஓடி ஓடியே ரன்களை சேர்த்து கடைசிக்கு முந்தைய பந்தில் போட்டியை முடித்தனர். நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.