பதும் நிசாங்காவின் விஸ்வரூபம்
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

துரதிர்ஷ்டவசமான மழை
ஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி வழங்கப்பட, அவர்கள் “சூப்பர் 8′ சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்பி இருக்கிறது.!